பொருட்பால் · நட்பியல் · பகைத்திறம் தெரிதல்
குறள் 878
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்பகைவர்கண் பட்ட செருக்கு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்பகைவர்கண் பட்ட செருக்கு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வழிவகை உணர்ந்து, தன்னையும் வலிமைப்படுத்திக் கொண்டு, தற்காப்பும் தேடிக் கொண்டவரின் முன்னால் பகையின் ஆணவம் தானாகவே ஒடுங்கி விடும்.