பொருட்பால் · படையியல் · படைச்செருக்கு
குறள் 780
திருவள்ளுவர் இயற்றிய குறள்
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடுஇரந்துகோட் டக்க துடைத்து.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடுஇரந்துகோட் டக்க துடைத்து.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தன்னைக் காத்த தலைவனுடைய கண்களில் நீர் பெருகுமாறு வீரமரணம் அடைந்தால், அத்தகைய மரணத்தை யாசித்தாவது பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டு.