பொருட்பால் · அமைச்சியல் · அவையறிதல்
குறள் 718
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்பாத்தியுள் நீர்சொரிந் தற்று.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்பாத்தியுள் நீர்சொரிந் தற்று.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், தானே வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும்.