பொருட்பால் · நட்பியல் · நட்பு
குறள் 790
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இனையர் இவரெமக் கின்னம்யாம் என்றுபுனையினும் புல்லென்னும் நட்பு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
இனையர் இவரெமக் கின்னம்யாம் என்றுபுனையினும் புல்லென்னும் நட்பு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நண்பர்கள் ஒருவருக்கொருவர் “இவர் எமக்கு இத்தன்மையுடையவர்; யாம் இவருக்கு இத்தன்மையுடையோம்” என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும்.