பொருட்பால் · அமைச்சியல் · தூது
குறள் 683
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்வென்றி வினையுரைப்பான் பண்பு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்வென்றி வினையுரைப்பான் பண்பு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும்.