பொருட்பால் · அமைச்சியல் · வினைத்தூய்மை
குறள் 660
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்கலத்துணீர் பெய்திரீஇ யற்று.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்கலத்துணீர் பெய்திரீஇ யற்று.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து, அதைக் காப்பாற்ற நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான்.