அறத்துப்பால் · துறவறவியல் · நிலையாமைகுறள் 339திருவள்ளுவர் இயற்றிய குறள்உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கிவிழிப்பது போலும் பிறப்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைநிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 338339 / 1330குறள் 340 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு.